எந்திரன் 4

TRANSMISSION SYSTEM AND CONTROLSபரணிராஜன்

டந்த இதழில் இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தியை, சக்கரங்களுக்குக் கடத்தும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் (கியர்பாக்ஸ்) பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, மேனுவலாக கியர் மாற்றும்போது கியர்பாக்ஸ் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம். கிளட்ச் எப்போதுமே இன்ஜினுக்கும் கியர்பாக்ஸுக்கும் இடையில் ஒரு தொடர்பில் இருக்கும். இன்ஜின் சுழல்வேகத்தை, கியர்பாக்ஸுக்குக் கடத்தும். அப்போது கிளட்ச் பெடலை அழுத்தினால், இன்ஜினுக்கும், கியர்பாக்ஸுக்கும் இடையே உள்ள தொடர்பு அறுபடும். அந்த இடைவெளியில் நமக்குத் தேவையான கியர்களை மாற்றிக்கொள்கிறோம். அதன் பின்பு கிளட்ச் பெடலில் இருந்து காலை எடுத்துவிட்டால், மறுபடியும் இன்ஜின், கியர்பாக்ஸ் இணைப்பு, புதிய வேகத்தில் தொடரும்.

மூன்று முக்கியமான ஷாஃப்ட்களைப் பார்ப்போம். முதலாவது, இன்ஜின் ஷாஃப்ட். இதனை இன்புட் ஷாஃப்ட் எனலாம். இதில் இருக்கும் கியர், கவுன்டர் ஷாஃப்ட் (counter shaft) அல்லது லே ஷாஃப்ட்டில் (lay shaft) இருக்கும் கியருடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும். இன்ஜின் சுற்றும் வேகத்தில், இந்த கவுன்டர் ஷாஃப்ட்டும் சுழலும். அடிப்படையில் இந்த கவுன்டர் ஷாஃப்ட்டில், இன்ஜின் ஷாஃப்ட்டுடன் இணைந்த கியர் தவிர, இன்னும் நாலைந்து கியர்கள் (வாகனத்தின் தேவைக்கேற்ப) இருக்கும். பெரும்பாலும் இந்த கியர்கள், இந்த ஷாஃப்ட்டிலேயே செய்யப்பட்டிருக்கும் அல்லது தனியாகச் செய்து ஷாஃப்ட்டுடன் பொருத்தப்பட்டிருக்கும். இதுபோக, அவுட்புட் ஷாஃப்ட் ஒன்று இருக்கும். கவுன்டர் ஷாஃப்ட்டில் இருக்கும் கியர்களின் (டிரைவன் கியர்கள்), இணை கியர்கள் (pair gears), இந்த அவுட்புட் ஷாஃப்ட்டின் மேல் ஃப்ரீயாகச் சுழலுமாறு பொருத்தப்பட்டிருக்கும். இன்புட் ஷாஃப்ட்டின் வேகத்துக்கேற்ப, கவுன்டர் ஷாஃப்ட் கியர்களும் மற்றும் அவுட்புட் ஷாஃப்ட்டில் உள்ள கியர்களும் (டிரைவ் கியர்கள்) சுழலும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்