பிஎம்டபிள்யூ - டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக்!

ஃபர்ஸ்ட் லுக் / பிஎம்டபிள்யூ G310Rதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ந்திய பைக் ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் கூட்டணியின் முதல் பைக், G310R அறிமுகமாகியுள்ளது. இந்த பைக், ஜெர்மனியில் உள்ள பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, டிவிஎஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட இருக்கிறது.

2016-ம் ஆண்டு மத்தியில், இந்தியாவில் பிஎம்டபிள்யூ பைக்காக G310R விற்பனைக்கு வரும். அதன் பிறகு, டிவிஎஸ் நிறுவனம் இதே பைக்கின் பிளாட்ஃபார்மில், இந்தியச் சந்தைக்கு ஏற்ற இன்னொரு பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், புதிய அப்பாச்சியுடன் இந்த பைக்கை டிவிஎஸ் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick