பட்ஜெட் க்ரூஸர்ஸ்!

ஃபர்ஸ்ட் லுக் / பஜாஜ் அவென்ஜர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

க்ரூஸர் பைக்குகளைத் தயாரிப்பதில் உலகளவில் பிரபலமான நிறுவனம், ஹார்லி டேவிட்சன். ஆனால், அது எல்லோராலும் வாங்கக்கூடிய விலையில் இல்லை. ராயல் என்ஃபீல்டு, க்ரூஸர் வகை பைக்குகளை நம் நாட்டில் தயாரித்து விற்பனை செய்கிறது. ஹார்லி அளவுக்கு இல்லை என்றாலும், விலை அதிகம் என்பதோடு - ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கான வெயிட்டிங் பீரியடும் அதிகம். ஆனால் க்ரூஸர் பைக் செக்மென்ட்டில், சத்தம் இல்லாமல் மாதந்தோறும் சராசரியாக 4,000 அவென்ஜர் பைக்குகளை எளிதாக விற்பனை செய்கிறது பஜாஜ். இதுவரை ஒரே மாடலில் மட்டுமே இந்த பைக்கை விற்பனை செய்த பஜாஜ், காலத்துக்கு ஏற்ப பைக்கை மேம்படுத்தியதுடன் நிற்காமல், 3 வேரியன்ட்களை அதிரடியாகக் களமிறக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick