ஸ்டேட்டஸ் கார்!

ஃபர்ஸ்ட் லுக் / ஃபோக்ஸ்வாகன் பீட்டில்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

லகின் மிகப் பிரபலமான கார் என்றால், அது ஃபோக்ஸ்வாகன் பீட்டில்தான். 65 ஆண்டுகளில் 22 மில்லியன் பீட்டில் கார்கள் விற்பனையாகி உள்ளன. ஆனால், இந்தியாவில் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. நான்கு ஆண்டுகளில் 250 பீட்டில் கார்கள்தான் விற்பனையாகின. அதனால், 2013-ம் ஆண்டே பீட்டில் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஃபோக்ஸ்வாகன்.
இப்போது புதிய பீட்டில் காரை இந்தியாவுக்குக் கொண்டுவரவிருக்கிறது. டிஸைனைப் பொறுத்த வரை, முன்பைவிட ஸ்போர்ட்டியாகக் காட்சி யளிக்கிறது. காரின் அடிப்படை டிஸைன் அப்படியே இருந்தாலும், காலத்துக்கும் வாடிக்கையாளர் விருப்பத்துக்கும் ஏற்றதுபோல மாறியுள்ளது.

பழைய கோல்ஃப் பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ள புதிய பீட்டிலில், முன்பக்கம் மல்டி-லிங்க் சஸ்பென்ஷன் உள்ளன. பின் பக்கம் சாதாரண டார்ஷன் பீம் செட்-அப்தான். இந்திய மார்க்கெட்டுக்கான பீட்டில் காரில் 16 -இன்ச் அலாய் வீல்களும், 205/60 R16 டயர்களும் உள்ளன. பின்பக்கம் டார்ஷன் பீம்-க்குப் பதிலாக 4-லிங்க் இன்டிபெண்டென்ட் சஸ்பென்ஷன் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick