இனி கியர் மாற்ற வேண்டாம்!

மாருதி வேகன்-R AMTதொகுப்பு: ராஜா ராமமூர்த்தி

ந்தியாவில் மாருதியின் எவர்கிரீன் கார், வேகன்-R. ஒவ்வொரு மாதமும் சுமார் 13,000 வேகன்-R கார்கள் விற்பனையாகின்றன. காரணம், வேகன்-R காரின் பிராக்டிக்காலிட்டிதான். சிட்டி டிராஃபிக்கில் அதிகம் தென்படும் வேகன்-R விற்பனை, இன்னும் அதிகரிக்கலாம். காரணம், வந்துவிட்டது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன்.

வேகன்-R AMT மாடலில் இன்ஜின் மாற்றம் எதுவும் இல்லை. 1.0 லிட்டர் 3-சிலிண்டர் K10 இன்ஜின் 67bhp சக்தியையும், 9.17kgm டார்க்கையும் அளிக்கிறது. இந்த இன்ஜின், குறைந்த ஆர்பிஎம்-களில் சற்று மந்தமாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் பெரிய பிரச்னையாகத் தெரியும் இது, AMT மாடலில் சிக்கலே இல்லை. பிக்-அப் நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ஜெர்க் இருந்தாலும், செலெரியோ, ஆல்ட்டோ கார்களைவிட பரவாயில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick