இந்தியாவின் பவர்ஃபுல் க்ராஸ்ஓவர்! | Fiat Avventura Abarth - first drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

இந்தியாவின் பவர்ஃபுல் க்ராஸ்ஓவர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்:/ ஃபியட் அவென்ச்சுரா அபார்த்தொகுப்பு: ரா. ராஜா ராமமூர்த்தி

ஃபியட் அவென்ச்சுரா அறிமுகமானது, 2014-ல் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில். மிக வித்தியாசமான கலர் மற்றும் ஸ்டைலிங்கில் - பார்த்தவர்களின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய கார். ஆனால், பில்டிங் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தாலும், பேஸ்மென்ட் வீக்காக இருந்தது. காரணம், காரில் 93bhp டீசல் மற்றும் 89bhp பெட்ரோல் இன்ஜின். இப்போது அறிமுகமாகியுள்ள அவென்ச்சுரா (அபார்த்) காரின் பவர், 140bhp சக்தி!

‘பவர்டு பை அபார்த்’ என இந்த அவென்ச்சுராவுக்கு டேக்-லைன் கொடுத்திருக்கிறது ஃபியட். அபார்த் புன்ட்டோவில் உள்ள 145bhp இன்ஜின்தான் இந்த காரில். ஆனால், கொஞ்சம் ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. 16-இன்ச் ஸ்கார்ப்பியன் ஸ்டிங் வீல்கள், அபார்த் பேட்ஜ்கள் பார்க்க எக்ஸைட்டிங்காக உள்ளன.

ஆக்ஸிலரேட்டரை மிதித்ததும் சீறுகிறது அவென்ச்சுரா. இந்த செக்மென்ட்டில், இப்படி ஒரு பவர் எந்த காரிலும் இல்லை. பவர் டெலிவரி மிகச் சீராக, எந்த வேகத்திலும், எந்த கியரிலும் அருமையாக வெளிப்படுகிறது. ஆனால், கொஞ்சமே கொஞ்சம் டர்போ லேக்!

இவ்வளவு பவர் இருப்ப தால், முதல் இரண்டு கியர்களில் டார்க் - ஸ்டீயர் அதிகமாக இருப்பதால், ஸ்டீயரிங் வீல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். 0-100 கி.மீ வேகத்தை 9.19 நொடிகளில் அடைகிறது. இது, ஹோண்டா சிட்டியைவிட அதிக வேகம். கியர்பாக்ஸ் ஷிஃப்ட் தரம் கொஞ்சம் சுமார். பிரேக்ஸ், இன்னும் சிறப்பாக இருந்திருக் கலாம். கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகம் என்பதால், கொஞ்சம் பிராக்டிக்கலான காராகவும் உள்ளது.

சென்னை ஆன் ரோடு விலை 11.49 லட்சம் ரூபாயில், கொடுக்கும் காசுக்கு ஏற்ற பெர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது. ஆனால், சஸ்பென்ஷன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஒட்டுமொத்த டிரைவிங் அனுபவம்தான் முக்கியம் என்றால், ஃபியட் அபார்த் புன்ட்டோ காரை வாங்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick