கலங்கடிக்கும் காஷ்மீர் பயணம்!

நெடுஞ்சாலை வாழ்க்கை (சீஸன் 2)கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

கோலாப்பூர் பயணத்தின்போது, சேலத்தில் இருந்து காஷ்மீருக்கு ஆப்பிள் லோடு ஏற்ற அழைத்த லாரி டிரைவர் மணி, விளையாட்டுக்காகப் பேசுகிறார் என நினைத்துக்கொண்டு, ‘‘தாராளமாகப் போகலாம்’’ எனப் பதில் சொல்லிவிட்டு மறந்து போனேன்.

சரியாக, கடந்த அக்டோபர் 30-ம் தேதி போன் செய்தார் மணி. ‘‘லாரி ஈரோட்ல லோடு ஏத்திக்கிட்டு இருக்கு. நாளைக்கு காலையில சேலத்தில இருந்து கெளம்புறோம்’’ என்றவரை, ‘‘எங்கே?’’ என்றதும், ‘‘மறந்துட்டீங்களா... காஷ்மீர் போகலாம்னு அன்னைக்கே சொன்னனே?’’ என்றதும் தூக்கிவாரிப் போட்டது. “காஷ்மீருக்கா..?” என்று ஜெர்க் ஆவதைக் கவனித்தவர், ‘‘பயமா இருக்கா?’’ என்றார். ‘‘சேச்சே... பயமா, இல்லையே... உடனே உங்களைக் கூப்பிடுறேன்’’ எனச் சொல்லிவிட்டு, எப்படிச் சமாளிப்பது என சிறிது நேரம் கையைப் பிசைந்துகொண்டிருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்