அன்பு வணக்கம் !

கார் வாங்குவது என்பது, 'வெறுமனே ஒரு வாகனம் வாங்கும் விஷயம்’ கிடையாது. ஆபீஸுக்கும் வீட்டுக்கும் போய்வர மட்டுமே பயன்படும் போக்குவரத்து சாதனமாக மட்டும் அதை யாரும் பார்ப்பது இல்லை. கார் என்பது பலருக்கு, குடும்பத்தின் ஓர் உறுப்பினரைப் போல. வேறு சிலருக்கோ, அது ஒரு மாபெரும் பாசப் பிணைப்பு; வாழ்க்கைக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டும் உயிர்த் துடிப்பான இயந்திரம். அதனால், புதிய கார் வாங்க விரும்புபவர்கள், விற்பனையில் இருக்கும் கார்களை மட்டும் கணக்கில்கொண்டு யோசிப்பது இல்லை. அடுத்து வரும் மாதங்களில் வேறு என்ன கார்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான், 'எந்த காரை வாங்குவது?’ என்று முடிவு எடுக்கிறார்கள். அதுதான் புத்திசாலித்தனமானதும்கூட. மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடக்க இருக்கிறது. டாடா ஞீமிசிகி, செவர்லே ஸ்பின், மாருதி சுஸூகி இக்னீஸ், டாடா நெக்ஸான், மாருதி சுஸூகி சீஙிகி, ஹோண்டா ஙிஸிக்ஷி ஆகியவை சீக்கிரமே அறிமுகமாக இருப்பதால், இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் 30 கார்கள் பற்றிய ட்ரெய்லர், கார் வாங்க உத்தேசித்திருக்கும் அத்தனை பேருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick