மோட்டார் கிளினிக்

எனது உயரம் 5.5 அடி. தினசரி அலுவலகம் சென்று வருவதற்காக, 150சிசி பைக் வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். அதிகபட்சம் 90 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில், எனக்கேற்ற 150சிசி பைக் எது?
 
- சிவா, ஈரோடு.

 உங்கள் உயரத்துக்குப் பொருத்தமாக, யமஹா FZ-V2.0 பைக் இருக்கும். ஏனெனில், 150 சிசி பிரிவில் அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய ஸ்டைல், சிறந்த கையாளுமை, போதுமான பெர்ஃபாமென்ஸ், பவர், மைலேஜ், வசதிகள் மற்றும் தரம் ஆகியவற்றை இந்த பைக் நிறைவாக வழங்குகிறது. ஆனால், 150 சிசியில் கம்யூட்டர் வகை பைக்தான் வேண்டும் என்றால், பஜாஜ் டிஸ்கவர் 150F சரியான சாய்ஸாக இருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick