சின்னப் பையன்... பெரிய ரேஸ்!

ரேஸிங் / மினி மோட்டோ கிராஸ்ஞா.சுதாகர், படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

டி ஆடும் வயதில், குட்டியாக ஒரு பைக் எடுத்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்த ஆலன் ரோவனை, கோவை புதூரின் டர்ட் டிராக் பயிற்சிக் களத்தில் சந்தித்தோம். திறமையான டர்ட் டிராக் வீரனைப் போல, மேடு-பள்ளங்களில் லாவகமாக எழுந்து நின்று, வளைவுகளில் காலை பேலன்ஸ் செய்தபடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த 10 வயது ஆலன் ரோவனைத் தொந்தரவு செய்யாமல், அவரது தந்தை ராபர்ட் ஆண்டனிராஜிடம் பேசினோம்.

‘‘அடுத்த ஆண்டு எம்ஆர்எஃப் நேஷனல் மோட்டோகிராஸ் போட்டியில் கலந்துகொள்வதுதான் ஆலனின் தற்போதைய இலக்கு. எனக்கு சிறு வயதில் இருந்தே மோட்டார் ரேஸிங் மீது ஆர்வம் அதிகம். அதில் கலந்துகொள்வதுதான் என் கனவாக இருந்தது. ஆனால், அந்த வயதில் அது பற்றிய விவரங்கள் தெரியாததால், தவற விட்டுவிட்டேன். எனவே, என் மகன் அதில் விருப்பப்பட்டால், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அதேபோல, ஆலனுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே, பைக் மீது மிக விருப்பமாக இருந்தான். வீட்டில் எப்போது தொலைக்காட்சியில் ரேஸ் நடந்தாலும் ஆர்வத்துடன் ரசிப்பான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick