ஏலகிரி - ஏழைகளின் நீலகிரி!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / ஃபோக்ஸ்வாகன் பஸாத்தமிழ், படங்கள்: பா.காளிமுத்து

“1970-ம் ஆண்டுக்கு முன்னால பொறந்தவங்க, ஜென் X; 70-ல் இருந்து 1995 வரை பொறந்தவங்க, ஜென் Y; 95-க்குப் பிறகு பொறந்தவங்க ஜென் Z; ஆனா, அதுக்கப்புறம் பொறந்த எல்லாருமே ‘அதுக்கும்’ மேல! நானும் என் பஸாத் காரும் அப்படித்தான். காலிங் ஃபார் ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப்... ப்ளீஸ் கால் மீ!’’ என்று நமது மோட்டார் இன்பாக்ஸில் சீரியஸாகச் சிரித்திருந்தார் கோவை - சூலூரைச் சேர்ந்த சரவணகுமார்.

வெள்ளிக் கம்பிகளாக மழை தூறிய ஒரு வெள்ளிக்கிழமை காலையில் சூலூரில் இறங்கினோம். ‘இயற்கை விவசாயி மயில்சாமியின் ஒரே மகன்’ என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சரவணகுமாரின் கராஜில் ஆடி A6, ஃபோக்ஸ்வாகன் பஸாத், ஸ்கார்ப்பியோ, ஸ்விஃப்ட், பீட் என்று குறுக்கும் நெடுக்குமாக கார்கள் அணிவகுத்திருந்தன. ‘‘அக்ரிக்கு அப்புறம் எனக்குப் பிடிச்ச விஷயம் ஆட்டோமொபைல். அக்ரி - அடிப்படை; ஆட்டோமொபைல் - ஆசை. ஆடியில நீங்க ஏற்கெனவே கிரேட் எஸ்கேப் பண்ணிப் போட்டீங்க... அதான் பஸாத்!’’ என்று உற்சாகமாகக் கிளம்பிய சரவணகுமார், இன்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick