ரேஸ் வீரனாக... RACE 2

பாலவிஜய்

இத்தாலியில், தினமும் பள்ளிக்குச் சென்று படிப்பது போன்றுதான் ரேஸுக்கான பயிற்சியும் நடக்கும். அதாவது, தினசரி கல்விப் பள்ளி முடிந்ததும் ரேஸ் பயிற்சிப் பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்புவார்கள். அங்கே, ஐந்து வயதில் இருந்தே ரேஸ் பயிற்சிகள் துவங்கிவிடும். பைக்குகள் மேல் ஆர்வம் அதிகம் இருக்கிறது என்றால், மினி மோட்டோ பைக்கில் பயிற்சி நடக்கும். கார் கள் மேல் ஆர்வம் இருக்கிறது என்றால், கோ-கார்ட் பயிற்சி.

ஆனால், இந்தியாவில் இருக்கும் நடைமுறை, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில், கார்க் பந்து தலையில் பட்டால் அடிபடும்; மைதானத்தில் ஃபீல்டிங் செய்யும்போது, கீழே விழுந்து அடிபட வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிந்தும் ஐந்து, ஆறு வயதுகளிலேயே கிரிக்கெட் பயிற்சிகளில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால், ரேஸுக்கு அப்படி இல்லை. 15 வயதுக்கு மேல் பைக் ஓட்டப் பழகி, அதன் பிறகு சூப்பர் பைக்குகள் ஓட்டப் பழகி ரேஸ் வீரராக உருவெடுப்பதற்குள், ரேஸில் இருந்து விலக வேண்டிய வயது வந்துவிடுகிறது. கிரிக்கெட் எப்படி ஒரு விளையாட்டோ, அதேபோல மோட்டார் ஸ்போர்ட்ஸும் ஒரு விளையாட்டுதான். ஆர்வம் இருப்பவர்களை சின்ன வயதில் இருந்தே பயிற்சி கொடுத்து மேலே கொண்டுவந்தால்தான், சர்வதேசத் தரத்துக்கு உயர முடியும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்