மோட்டார் விகடன் நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புஉணர்வுப் பிரசாரம்!

‘எதிர் வண்டிக்கு உன் விளக்கு; தணிந்து ஒளிர்ந்தால் நல் விளக்கு! செல்போனை அணை; சீட் பெல்ட்டை இணை! மது அருந்தாதே மது அருந்தாதே, வண்டியை ஓட்ட அது பொருந்தாதே!’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி, 31.12.14 அன்று மோட்டார் விகடன் சார்பில் மாணவர்களும் இளைஞர்களும் தமிழகத்தின் முக்கிய நகரங்களின் சந்திப்புகளில், சாலைப் பாதுகாப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தஞ்சாவூர், ஓசூர், சேலம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் மொத்தம் 21 இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தில் காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையாளர், போக்குவரத்துத் துறை அதிகாரி மற்றும் லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்தவர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்