மோட்டார் நியூஸ்

ரெனோ நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் லாட்ஜி எம்பிவியின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையாகும் லாட்ஜி காருடன் ஒப்பிடும்போது, முன்பக்கம் மட்டும் சில டிஸைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. க்ரில் டிஸைனில் க்ரோம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்க பம்பர் மற்ற நாடுகளில் காரின் கலரிலேயே இருக்கும். ஆனால், இங்கே கறுப்பு வண்ண பிளாஸ்டிக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே டஸ்டர் காரின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும்் என எதிர்பார்க்கலாம். காரின் வீல்பேஸ் 2,810 மிமீ. டஸ்ட்டரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்தான். மார்ச் மாதவாக்கில் 8 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரவிருக்கிறது புதிய லாட்ஜி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்