பேசும் பைக் !

கிளாஸிக் பைக் / YAMAHA RX-Z 135கா.பாலமுருகன், படம்: ஆ.முத்துக்குமார்

ழைய பைக்காக இருந்தாலும், கிளாஸிக் அந்தஸ்து பெற்றுவிட்ட பைக்குகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு. தனித்தன்மை, ஹேண்ட்லிங், பிக்-அப், பராமரிப்பு ஆகிய விஷயங்களுக்காக இன்றைக்கும் போற்றப்படும் - சந்தையில் டிமாண்டாக இருக்கும் பைக்குகளில், யமஹாவுக்குத் தனி இடம் இருக்கிறது. யமஹாவின் RX 100, RX 135, வரிசையில், RX-Z 135 மாடல் முக்கியமானது. காரணம், முழுக்க முழுக்க உதிரி பாகங்களாக இறக்குமதியாகி, அசெம்பிள் செய்து இங்கே விற்பனைக்கு வந்தது இந்த பைக். 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த RX-Z 135, வித்தியாசமான பாடி ஸ்டைலுடன் அப்போது இருந்தது.

 RX135 மாடலில் இருந்த இன்ஜின்தான் RX-Z 135 பைக்கிலும் என்றாலும், இதில் அதிக பிக்-அப் அளிப்பதற்காக வேறுவிதமாக ட்யூனிங் செய்திருந்தது யமஹா. ஆனால், ஃப்ரேம், பாடி பார்ட்ஸ் முழுக்க வேறு என்பதுதான் இதன் தனித்தன்மை. அதேபோல், முதன்முறையாக இந்த செக்மென்டில் ஆர்பிஎம் மீட்டருடனும் ட்வின் பார்ட் கன்ஸோலுடனும் வந்த முதல் பைக் RX-Z 135.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்