மேலும் ஒரு ட்ரீட் !

மினி எஸ்யுவி - HYUNDAI CRETAபி.ஆரோக்கியவேல்

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு எக்கோஸ்போர்ட், நிஸான் டெரானோ ஆகிய மினி எஸ்யுவிகளின் ஆர்ப்பாட்டமான வருகைக்கு, ஹூண்டாய் கொடுக்கும் பதில், க்ரீட்டா! ஹூண்டாயின் நிரூபிக்கப்பட்ட ஃப்ளுயிடிக் டிஸைன், 0.2 வெர்ஷனில் உருவாக்கப்பட்டிருக்கும் க்ரீட்டாவில், க்ரீஸ் கோடுகள் தூக்கலாக இல்லாமல் சற்று மென்மையாகவே இருக்கின்றன.

எப்படி இருக்கிறது க்ரீட்டா?

வெளியில் இருந்து பார்த்தால், சான்டா ஃபீ காரை சற்றே சின்னது ஆக்கியதைப்போல இருக்கிறது. ஆனால், i20 பிளாட்ஃபார்மில்தான் க்ரீட்டா உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளைக்கொண்ட க்ரோம் கிரில், டெலிஸ்கோப்பிக் ஹெட்லைட்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ், ஃபாக் லேம்ப்ஸ், ஏர் டேம், 16 இன்ச் அலாய் வீல், விங் மிரர் இண்டிகேட்டர்கள் ஆகியவற்றைத் தாண்டி, முதலில் கண்களைக் கவர்வது, கறுப்பு நிறத்தில் இருக்கும் A பில்லர்தான். ‘இருந்தும் இல்லாமல் இரு’ என்பதைப் போலக் காட்சியளிக்கும் A பில்லர், காரை அகலமானதாகக் காட்டுகிறது. 

i20 போலவே, இரட்டை வண்ண உள்ளலங்காரத்தில் இருக்கும் க்ரீட்டாவில் i20 காரில் இருக்கும் பல பாகங்களைப் பார்க்க முடிகிறது. கீ-லெஸ் என்ட்ரி, ABS, EBD, ESP ஆகிய அம்சங்களோடு 2 காற்றுப் பைகளும் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன.

க்ரீட்டாவில் இருப்பது 1.4 மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின்கள். இவை முறையே 121bhp மற்றும் 88bhp சக்தியைக் கொடுக்கக்கூடியவை. டீசல் இன்ஜின்கொண்ட காரில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸும், பெட்ரோல் இன்ஜின்கொண்ட காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸும் இருக்கிறது. பெட்ரோல் மாடலில் இருப்பது 1.6 லிட்டர் VTVT இன்ஜின். அகலத்திலும் நீளத்திலும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டைவிட பெரிதாக இருக்கும் ஹூண்டாய் க்ரீட்டா, ரெனோ டஸ்ட்டரைவிட இந்த இரண்டு விஷயத்திலும் சற்றே சிறிதாக இருக்கிறது. உயரத்தைப் பொறுத்தவரை, இந்த இரண்டு போட்டி கார்களைவிடவும் க்ரீட்டா குறைவாகவே இருக்கிறது.

மாருதி எஸ் கிராஸ் எஸ்யுவியும் வேகமாக அறிமுகமாக இருப்பதால், மீண்டும் இந்த மினி எஸ்யுவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ட்ரீட் காத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick