சுஸூகி ஜிக்ஸர் கப் 2015

ஞா.சுதாகர், படம்கள் : ஸ்ரீநிவாசன்

ந்தியச் சந்தையில் ஜிக்ஸரைக் களம் இறக்கிய சந்தோஷத்தில், ரேஸிங்கிலும் புகுந்துவிட்டது சுஸூகி. இந்தியாவில், முதன்முறையாக ரேஸ் கனவு, கோவையில் நனவாகியது. கடந்த ஜூன் 6, 7 தேதிகளில் இந்தியாவில் தேசிய அளவிலான முதல் சுஸூகி ஜிக்ஸர் கப்-2015 (Suzuki gixxer cup 2015)- வெற்றிகரமாக நடந்தது. ஜிக்ஸர் பைக்குகளுக்காக ஜிக்ஸர் கோப்பையுடன், மற்ற பைக்குகளுக்கும் வாய்ப்பு அளித்து, இரண்டு பிரிவாகப் போட்டிகளை நடத்தியது சுஸூகி. இது பற்றி சுஸூகி நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு விரிவாகக் கூறினார்...

“சர்வதேச அளவில் சுஸூகி நிறுவனம் ரேஸ் மற்றும் ஸ்போர்ட்ஸுக்காகவே பிரபலமானது. இந்திய அளவில் சுஸூகி நிறுவனம் ரேஸிங்கில் பங்கேற்பது இதுதான் முதல் முறை. இந்தியாவில் ரேஸிங் கலாசாரத்தைப் பிரபலப்படுத்த, இந்தப் போட்டிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். ரேஸில் ஆர்வம் இருப்பவர்கள் இங்கு நிறைய இருந்தாலும் ‘திறன்மிக்க பைக் வேண்டுமே. நிறைய செலவாகுமே, அனுபவமிக்க மெக்கானிக் வேண்டுமே!’ என்று அவர்களுக்கு நிறையத் தயக்கங்கள் இருக்கும். அதை முதலில் நீக்க விரும்பினோம். இதற்காக நாங்களே போட்டியாளர்களுக்கு பைக், எரிபொருள், மெக்கானிக் என அனைத்தையும் வழங்கி, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து களம் இறக்கியுள்ளோம். நுழைவுக் கட்டணம் மட்டும் அவர்கள் செலுத்தினால் போதும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்