மோட்டார் நியூஸ்

சென்னை பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில், கார் அசெம்பிளிக்காகப் பயன்படுத்தப்படும் உள்நாட்டுப் பாகங்களின் பங்களிப்பு 50 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தத்தின்படி, இப்போது இன்ஜின்களையும், கியர்பாக்ஸ்களையும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மூலம் பெறுகிறது பிஎம்டபிள்யூ இந்தியா. மேலும், Tenneco ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எக்ஸாஸ்ட்டுகள், Lear இந்தியா நிறுவனத்திடம் இருந்து இருக்கைகள், Valeo India, Mahle Behr நிறுவனங்களிடம் இருந்து ஏ.சி சிஸ்டம், ZF Hero சேஸி நிறுவனத்திடம் இருந்து ஆக்ஸில்கள், Draexlmaier நிறுவனத்திடம் இருந்து வொயரிங், டோர் பேனல்கள் போன்றவற்றை வாங்குகிறது பிஎம்டபிள்யூ இந்தியா. Make In India கொள்கையின்படி, Localization அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ சொல்கிறது. இந்தத் தருணத்தைக் கொண்டாடுவதற்காக, சச்சின் டெண்டுல்கரை அழைத்து வந்திருந்தது பிஎம்டபிள்யூ. சச்சின் 5 சீரிஸ் 520d மாடல் கார் ஒன்றை, தன் கையால் அசெம்பிள் செய்து அசத்தினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்