அந்தரத்தில் அதிரடி !

அன்னம் ஹஷீம்சார்லஸ்

க்கத்து வீட்டு ஒல்லி பெல்லி கல்லூரிப் பெண் போல இருக்கும் அன்னம் ஹஷீமிடம், பைக்கைக் கொடுத்தால் மிரளவைக்கிறார். அந்தரத்தில் பைக்கோடு பறப்பது, பைக் மீது நின்றுகொண்டு ஓட்டுவது, வீலி, பர்ன் அவுட், டிரிஃப்ட் என பைக் ஸ்டன்ட்டில் அசத்துகிறார். 20 வயதான அன்னம் ஹஷீம், தனது அப்பாச்சி RTR180 பைக்கை பொம்மையைப்போல டீல் செய்வதைப் பார்த்து, ஸ்டன்ட் பாய்ஸே கொஞ்சம் மெர்சலாகி இருக்கிறார்கள்.

‘‘நான் கான்பூர் பொண்ணு. சின்ன வயசில் அப்பாகூட பைக் பெட்ரோல் டேங்க்கில் உட்கார்ந்து போவேன். கியர், பிரேக் கன்ட்ரோலை எல்லாம் அப்பா பார்த்துக்கொள்ள... நான் பைக்கின் ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு கொஞ்ச தூரம் ஓட்டுவேன். வளர்ந்த உடனே அப்பாவே பைக் ஓட்டக் கற்றுக்கொடுத்தார். அப்பா எங்கே போனாலும் பைக்கில்தான் போவார். கான்பூரில் இருந்து ஆண்டுதோறும் நேபாளத்துக்கு பைக்கிலேயே போவார். என்னையும் உடன் அழைத்துச் செல்வார். அவரிடம் இருந்து ஆரம்பித்ததுதான் இந்த பைக் காதல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்