ரேஸ் சகோதரர்கள் !

சார்லஸ், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

ரேஸில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்தால் மட்டும் போதும்; ரேஸ் பின்புலமோ, பணமோ தேவை இல்லை’’ - இதைப் படிக்கும்போதெல்லாம், ‘இதெல்லாம் சாத்தியமா’ என்ற சந்தேகமே பலருக்கும் வரக்கூடும். அந்தச் சந்தேகத்தை உடைத்து சாதித்திருக்கிறார்கள், சென்னையைச் சேர்ந்த பிரஷாந்த் - கார்த்திக் சகோதரர்கள். இவர்கள் இருவருமே ரேஸுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாதவர்கள். இவர்களின் பெற்றோர் அரசு ஊழியர்கள்.

‘‘பிறந்து வளர்ந்தது சென்னை தாம்பரம். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் விலங்கியல் படிக்கச் சேர்ந்தேன். ஒரு வருஷம் படிச்சுட்டு இருக்கும்போது, பைலட் ஆகிற மாதிரி கனவு வர, அமெரிக்காவுக்கு பைலட் பயிற்சி பெறப் போனேன். கமர்ஷியல் பைலட்டாகி மீண்டும் சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்குத் திரும்பி, டிகிரியை முடித்தேன். அப்போதுதான் திடீர்னு ஒரு நாள் கார் ரேஸராகணும்னு ஆசை கிளம்புச்சு. இன்டர்நெட்ல பார்த்தேன்; சில நண்பர்கள்கிட்ட பேசினேன்; சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் டூரிங் கார்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்க பெயர் கொடுத்துட்டேன். தட்டுத் தடுமாறி ரேஸ் டிராக்ல கார் ஓட்டுறது எப்படின்னு கத்துக்கிட்டேன். ஜெயிக்கலைனாலும் நமக்குள்ளும் ஒரு ரேஸர் இருக்கான்னு புரிஞ்சது. அடுத்த வருஷமே ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனம் நடத்திய போலோ கப் ரேஸ் செலக்‌ஷனில் கலந்துக்கிட்டேன்; தேர்வானேன். நான் போலோ கப்பில் சேர, சென்னை எம்ஐடி-ல் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருந்த என் தம்பி கார்த்திக்கையும் ரேஸுக்குள் கொண்டுவந்தேன். அவன் ஜூனியர் டூரிங் ரேஸில் கார் ஓட்ட, நான் போலோ கப்பில் கலந்துக்கிட்டேன்!’’ என்றார் அண்ணன் பிரஷாந்த்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்