கமான் கஸ்ட்டோ!

MAHINDRA GUSTOரா.ராஜா ராமமூர்த்தி, படங்கள் : செ.பாலசுப்ரமணியன்

ஹிந்திராவின் ‘மாஸ்’ ஸ்கூட்டராகக் களமிறங்கியிருக்கிறது கஸ்ட்டோ. ஹோண்டா, தனி ஆளாக ஸ்கூட்டர் சந்தையை ஆக்டிவா மூலம் ஆக்கிரமித்திருக்கும் வேளையில், கஸ்ட்டோ மூலம் பெரிய ‘ரிஸ்க்’ எடுத்திருக்கிறது மஹிந்திரா. கஸ்ட்டோ, பெஸ்ட்டா?
 
டிஸைன்

கார், பைக் என மஹிந்திராவின் எந்த வாகனமாக இருந்தாலும் பெயர் ‘ஓ’வில் முடிய வேண்டும் என்கிற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுவிட்டதால், கஸ்ட்டோ என இந்த ஸ்கூட்டருக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். கஸ்ட்டோ என்றால், காற்று என்று அர்த்தமாம். கஸ்ட்டோவின் டிஸைன், பார்ப்பதற்குக் கொஞ்சம் புதிதுபோல இருந்தாலும் பார்த்ததும் பிடிக்கும் வகையில் இல்லை. அதேசமயம், ஆக்டிவாவைப்போல கொழுக் மொழுக் ஸ்கூட்டராக இல்லாமல், அழகாக இருக்கிறது. பின்பக்க விளக்குகளின் டிஸைன் அழகாக இருப்பதோடு, கஸ்ட்டோவுக்குத் தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. சூப்பர் டிஸைன்; வட்டமான லைட்ஸுக்கு நடுவே மஹிந்திரா லோகோ இருப்பது புதுமை. இரவில் ‘இது கஸ்ட்டோ’ என்று தனித்துக் காட்டுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்