பவர்ஃபுல் ரிட்டர்ன் ’ஆம்பள’ ஸ்கூட்டர்! - சீஸன் - 2

சார்லஸ்

காலச்சக்கரம் மீண்டும் ஸ்கூட்டர் மார்க்கெட்டை நோக்கிச் சுழல ஆரம்பித்திருக்கிறது. 1980-களில் ஸ்கூட்டர்கள்தான் இந்தியர்களின் அடையாளமாக இருந்தது. அதன் பிறகு சுஸூகி மேக்ஸ் 100, ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் என 100சிசி பைக்குகள் ஆண்களுக்கான பைக்குகளாக மாறின. ஆனால், டிராஃபிக் நெருக்கடிகளால் சிக்கி சின்னாபின்னமாகும் பைக் ஓட்டிகள், கியர் மாற்ற வேண்டாம்; சிக்னல் போட்டவுடன் சட்டெனப் பறக்கலாம் என்பதால், மீண்டும் ஸ்கூட்டர்களையே தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு, இந்திய இரு சக்கர வாகனங்களின் விற்பனையே ஆதாரம்.

இந்தியாவில் விற்பனையாகும் 100 இரு சக்கர வாகனங்களில், 30 ஸ்கூட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ப்ளெண்டருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் இரு சக்கர வாகனம், ஹோண்டா ஆக்டிவா. கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் தமிழகத்தில் ஸ்கூட்டர்களின் விற்பனை, 35 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020-ம் ஆண்டுக்குள் ஸ்கூட்டர்களின் விற்பனை 40 - 45 சதவிகிதம் எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்கூட்டர் தயாரிப்பு அதிகமாகத் துவங்கியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்