அன்பு வணக்கம்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹேட்ச்பேக் கார்களுக்கு இருந்த வரவேற்பு, இப்போது மல்ட்டி யுட்டிலிட்டி கார்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. மாருதி எர்டிகா, நிஸான் எவாலியா, செவர்லே என்ஜாய், ஹோண்டா மொபிலியோ, டட்ஸன் கோ ப்ளஸ் என 7 சீட்டர் கார்கள் விற்பனைக்கு வந்துகொண்டே இருப்பதை வைத்தே, இதற்கான மார்க்கெட் அதிகரித்திருப்பதைப் புரிந்துகொள்ளலாம். பட்டியல், இதோடு நிற்கப்போவது இல்லை. எர்டிகாவுக்கும் மொபிலியோவுக்கும் கடுமையான சவால் இனிமேல்தான் காத்திருக்கிறது.

ரெனோவின் 7 சீட்டர் காரான லாட்ஜி, ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வருகிறது. இது டொயோட்டா இனோவாவுக்கே சவால்விடும் கார். காரணம், ஸ்டைலிலும், இடவசதியிலும், பெர்ஃபாமென்ஸிலும் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் லாட்ஜி, இனோவாவைவிட கிட்டத்தட்ட 3 - 4 லட்சம் ரூபாய் விலை குறைவாக இருக்கும். எந்தெந்த விஷயங்களில் லாட்ஜி பெஸ்ட்; எங்கே எல்லாம் இனோவா ஸ்கோர் செய்கிறது; லாட்ஜியின் பெர்ஃபாமென்ஸ் எப்படி என ஓட்டிப் பார்த்து, முழுமையான டெஸ்ட் ரிப்போர்ட்டை இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். 7 சீட்டர் கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு, இந்த டெஸ்ட் ரிப்போர்ட் மிக உதவியாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்