தலைக் காக்கப் போராடும் சிறுவன்

கு.முத்துராஜா, படங்கள்: அ.பார்த்திபன்

சென்னை ராஜீவ் காந்தி சாலை; பரபரப்பான காலை நேரம்; சோழிங்கநல்லூர் சிக்னலில்  ஆறு வயது சிறுவன், சிக்னலுக்காக நின்றிருக்கும் ஹெல்மெட் அணியாத பைக் ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரம் கொடுத்து, “ப்ளீஸ் அங்கிள், ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க!” என்கிறான்.

சிலர், அந்தச் சிறுவனைத் தோள்தட்டி உற்சாகப்படுத்த, பெரும்பாலானோர் அந்தச் சிறுவனைப் பார்த்ததுமே, டேங்க்கில் இருக்கும் ஹெல்மெட்டை உடனே அணிந்துவிடுகின்றனர். ‘பார்த்துக் கொடுப்பா, சிக்னல் ஓப்பன் ஆகப்போகுது’ என சிலர் பதற்றமாக... தனி ஆளாக வாகன நெரிசலில் புகுந்து விழிப்புஉணர்வை விதைத்துவிட்டு, சிக்னல் ஓப்பனாகும்போது விரைவாக வெளியேறுகிறான். நமக்கோ ஆச்சரியம். அந்தச் சாலையில் வழக்கமாகச் செல்பவர்களுக்கோ, இது தினசரி விஷயமாம். யார் இந்தச் சிறுவன்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்