ரேஸ் வீரனாக... RACE 3

பாலவிஜய்

ரேஸ் என்று சொன்னதுமே பெரும்பான்மை-யானவர்களிடம் இருந்து வரும் பதில், ‘அது காஸ்ட்லி விளையாட்டு’ என்பதுதான். ஆனால், அப்படிச் சொல்பவர்கள் பலருக்கும் ரேஸில் கலந்துகொள்ள எவ்வளவு செலவாகும் என்கிற உண்மை விவரம் தெரியாது. ரேஸ் ஆபத்தானதுதான். ஆனால், சரியான ரேஸ் உபகரணங்களை அணிந்து ரேஸ் ஓட்டினால், எந்த ஆபத்தும் இல்லை.

ரேஸ் உபகரணங்களைப் பொறுத்தவரை சூட், ஹெல்மெட், க்ளோவ்ஸ் என எதை வாங்கினாலும் FIA சான்றிதழ் பெற்ற உபகரணத்தைத்தான் வாங்க வேண்டும். கார் ரேஸில் கலந்துகொள்ள வேண்டும் என்பவர்களுக்கு, 3 லேயர் ஃபேப்ரிக் ஃபயர் ப்ரூஃப் சூட் அவசியம். இந்த சூட்டைப் பொறுத்தவரை, எடை குறையக் குறைய இதன் விலை அதிகம். அதாவது, விலை உயர்ந்த ரேஸ் சூட்டை அணியும்போது, அது உங்கள் உடல் மீது இருப்பதுபோன்ற உணர்வே எழாது. மேலும், ரேஸில் எப்படிப்பட்ட விபத்து நடந்தாலும், இதை அணிந்திருப்பதால், உடலில் காயங்கள் ஏதும் படாது. அதேபோல், கார் தீப்பிடித்தாலும் ரேஸ் சூட்டில் தீப்பிடிக்காது. இந்த ரேஸ் சூட் 20,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது. அதேபோல், ரேஸ் ஷூ பூட் வாங்க 18,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாய் வரை செலவாகும். ரேஸ் க்ளோவ்ஸ் 8,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை கிடைக்கிறது. ரேஸ் சூட், க்ளவுஸ், பூட் ஆகியவற்றை ஸ்பார்க்கோ, ஓஎம்பி, ஆல்பைன்ஸ்டார், பூமா ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஹெல்மெட்டைப் பொறுத்தவரை 25,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை கிடைக்கின்றன. ஷோஇ (Shoei), அராய், பெல் ஆகிய நிறுவனங்கள் ஹெல்மெட் தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்