ராசியுள்ள ராஸி !

பைக் ரேஸ் MOTO GPசார்லஸ்

லகின் உண்மையான ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் கதாநாயகன், வாலன்டினோ ராஸிதான். பரபரப்பாகத் துவங்கியிருக்கும் 2015 மோட்டோ ஜீபி சீஸனின் முதல் மூன்று ரேஸ்களில், இரண்டில் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன்ஷிப் கோதாவில் குதித்திருக்கிறார் ராஸி.

 ஆறு முறை மோட்டோ ஜீபி சாம்பியன் பட்டம் வென்றவர், 36 வயதான வாலன்டினோ ராஸி. ஆனால் 2010-ல் இருந்து மீண்டும் சாம்பியனாகப் போராடிக்கொண்டிருக்கிறார். யமஹாவின் செல்லப்பிள்ளையாக இருந்த இவர், இடையில் டுகாட்டி அணிக்குத் தாவினார். இரண்டு ஆண்டுகள் டுகாட்டி அணியில் இருந்த இவரால், சாம்பியன்ஷிப் பட்டியலில் 6-வது, 7-வது இடங்களையே பிடிக்க முடிந்தது. யமஹாவுடன் சமாதானமாகி மீண்டும் அணிக்குள் வந்த ராஸி, கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்லும் வெறியுடன் இருக்கும் ராஸி, மீண்டும் சாம்பியனாவதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்