ஆல்ட்டோ, இயானுடன் மோதும் ரெனோ க்விட் !

800 சிசி மினி கார்கள்தொகுப்பு: சார்லஸ்

மாருதி மற்றும் ஹூண்டாயின் ஏகபோக   ஏரியாவாக இருக்கும் 800சிசி கோட்டைக்குள், க்விட் கார் மூலம் களம் இறங்கியிருக்கிறது ரெனோ. ஸ்டைலான, அதிக இடவசதி கொண்ட காராக மட்டும் அல்லாமல், விலை குறைவான காராகவும் விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது ரெனோ.

மாஸ் மார்க்கெட்டுக்குள் நுழைய மிகப் பெரிய தில் வேண்டும். காரணம், பைக்கில் இருந்து அடுத்த கட்டமாக முதல் கார் வாங்குபவர்கள்தான் 800சிசி கார் மார்க்கெட்டின் 90 சதவிகித வாடிக்கையாளர்கள். கார் ஸ்டைலாக இருக்க வேண்டும்; ஐந்து பேர் காருக்குள் வசதியாக உட்கார்ந்து பயணிக்க வேண்டும் என்பது எல்லாம் தாண்டி, சர்வீஸ் செலவுகள் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தேவை. பைக்குக்கு, பொதுவாக ஆண்டுக்கு 3,000 ரூபாய் வரை சர்வீஸ் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆல்ட்டோ வாடிக்கையாளர் ஓர் ஆண்டுக்கு சர்வீஸுக்கு 5,000 ரூபாய் வரை செலவு செய்வார். அதுதான் ஆல்ட்டோவின் பலம். சர்வீஸ் செலவு குறைவாகவும், ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலைகளும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும். பராமரிப்புச் செலவு குறைவாக இருந்தால் மட்டுமே க்விட் வெற்றிபெற முடியும்.  ஆனால் ரெனோ, ஆல்ட்டோவைவிட க்விட் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் விலை 19 சதவிகிதம் குறைவு என்கிறது. இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick