எந்திரன் - 11 | Enthiran - Motor Vikatan | மோட்டார் விகடன்

எந்திரன் - 11

கிளட்ச் எப்படி வேலை செய்கிறது?பரணிராஜன்

வாகனத்தின் கன்ட்ரோல் யூனிட்களில் ‘கிளட்ச்’ மிக முக்கியமானது. இன்ஜின் சக்தியை, டிரான்ஸ்மிஷனுக்குத் தேவைப்படும்போது கடத்துவதும், தேவையில்லாதபோது நிறுத்தி வைப்பதும்தான் இதன் வேலை.

ஆட்டோமொபைல் வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஜின், தொடர்ச்சியாக ஒரே சீரான வேகத்தைத் தரும். அந்தக் குறிப்பிட்ட வேகத்தில் நிறுத்தியிருக்கும் வாகனத்தை நகர்த்துவதும், சாலை மாறுபாடுகளுக்கேற்ப வேகத்தை மாற்றுவதும் முடியாது. இதனைச் சாத்தியப்படுத்தி, தேவையான வேகத்தை அளிக்கும் டிரான்ஸ்மிஷன் பற்றி முன்பு படித்தோம். வாகனம் நியூட்ரலில் இருக்கும்போதும்; இயக்கத்தில் இருக்கும்போதும்; டிரான்ஸ்மிஷன் இன்ஜினுடன் தொடர்பிலேயே இருக்கும். அதாவது, கிளட்ச் ‘எங்கேஜிங்’(Engaging) நிலையிலேயே இருக்கும். கிளட்ச் பெடலை அழுத்துவதன் மூலம், இதனை ‘டிஸ்-என்கேஜிங்’(Dis-engaging) செய்து, (இன்ஜின் சக்தி, டிரான்ஸ்மிஷனுக்குக் கடத்தப்படாத நிலை) நமக்குத் தேவையான வேகத்தினை மாற்றிக்கொள்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick