ஹோண்டாவின் அதிரடி திட்டம்! - அட்டாக் 100 சிசி!

டெஸ்ட் ரிப்போர்ட் / ஹோண்டா லிவோராகுல் சிவகுரு, படங்கள்: ர.சதானந்த்

ந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  மறுபக்கம் நாட்டின் இரண்டாவது பெரிய பைக் தயாரிப்பாளரான ஹோண்டா, தனது பைக்குகளின் எண்ணிக்கையையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  பெர்ஃபாமென்ஸ் பைக்குளைவிட அதிகம் விற்பனையாகும் கம்யூட்டர் வகை பைக்குகளில்தான் ஹோண்டாவின் கவனம் அதிகம். அதனால் ட்விஸ்ட்டர், ட்ரீம் யுகா பைக்குகளுக்கு நடுவில், இன்னொரு 110சிசி பைக்காக வந்திருக்கிறது லிவோ.

டிஸைன்

ஒரு 125சிசி பைக்குக்கான டிஸைனைக்கொண்ட 110சிசி பைக், லிவோ. பைக்கின் ஹெட்லைட் மற்றும் பெட்ரோல் டேங்க் டிஸைனில் ட்விஸ்ட்டர் பைக்கின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. டேங்கின் இருபக்கமும் உள்ள ஸ்கூப்பில், 3D-யில் ஹோண்டா லோகோ மின்னுகிறது. பின்பக்க பாடி பேனல்கள் மற்றும் டெயில் லைட் டிஸைன், ட்ரீம் சீரிஸ் பைக்குகளில் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் இன்ஜின், அலாய் வீல்கள், எக்ஸாஸ்ட், ஹேண்டில்பார்  மற்றும் பின்பக்க கிராப் ரெயில் ஆகியவை கறுப்பு நிறத்தில் உள்ளன. அறுகோண வடிவத்தில் இருக்கும் ஸ்பீடோ மீட்டர் மற்றும் ஃப்யூல் கேஜ் தெளிவாக இருக்கின்றன.   


     
பெர்ஃபாமென்ஸ்

குறைவான வேகங்களில் சைலன்ட்டாக இயங்கும் இன்ஜின், அதிக வேகங்களில், மற்ற 110சிசி பைக்குகள்போல அலறுகிறது. லிவோ பைக்கில் இருப்பது, ட்ரீம் சீரிஸ் பைக்குகளில் இருக்கும் அதே  109.2 சிசி, சிங்கிள் சிலிண்டர், கார்புரேட்டட் HET இன்ஜின்.  4-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட லிவோ, 7,500 ஆர்பிஎம்-ல் 8.25bhp பவரையும், 5,500 ஆர்பிஎம்-ல் 0.88kgm டார்க்கையும் அளிக்கிறது. பைக்கின் பிக்-அப் மற்றும் மிட் ரேஞ்ச் சிறப்பாக இருப்பதால், 60 கி.மீ வேகத்தை விரைவாக அடைய முடிகிறது. இதனால், சிட்டி டிராஃபிக்கில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது லிவோ. ஆனால், அதிக வேகங்களில் செல்லும்போது, அதிர்வுகளை உணர முடிகிறது.

கையாளுமை

பைக்கை டிராஃபிக்கில் நன்கு வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு - அகலமான ஹேண்டில்பார்களும், இதன் குறைவான எடையும் (111 கிலோ) துணை புரிகின்றன. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தை அளிக்கின்றன. தவிர, வாகனத்தின் ஸ்டெபிலிட்டி அனைத்து வேகங்களிலும் சிறப்பாக இருக்கிறது.


110 சிசி பைக்குகளுடன் ஒப்பிடும் போது, விலை அதிகமான பைக்காக இருக்கிறது லிவோ. ஆனால், நகரச் சாலைகளில் பைக்கின் செயல்திறன் சிறப்பாக இருக்கிறது. ஓட்டுதல் தரம், அதிக வேகங்களில் பைக்கின் ஸ்டெபிலிட்டி மற்றும் ஸ்டைல் போன்ற விஷயத்தில், மற்ற 110சிசி பைக்குகளைவிட ஒரு படி மேலே இருக்கிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கான சிறந்த பைக்காக வெளிவந்திருக்கிறது லிவோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick