அலுக்கும் மேனுவல்... அசத்தும் ஆட்டோமேட்டிக்!

ஒப்பீடு / ஹோண்டா ஜாஸ் vs நிஸான் மைக்ராதொகுப்பு: சார்லஸ்

சை ஆசையாக கார் வாங்கி, நகர டிராஃபிக் நெருக்கடிகளில் சிக்கிச் சின்னாபின்னமாகி, அடிக்கடி கியர்களை மாற்றி, கிளட்ச் மிதித்து கடுப்பாகி, கடைசியில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரில் அலுவலம் நோக்கிப் பறப்பவர்கள் நிறைய! ஆனால், ஸ்கூட்டரில் வெயில், மழையில் பயணிக்க முடியாதே... அதனால்தான் இப்போது ஆட்டோமேட்டிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

ஆனால், ஆட்டோமேட்டிக் கார்கள் என்றாலே, மைலேஜ் அதிகம் கிடைக்காது என்பதுதான் பல காலமாக இருந்து வந்த பிரச்னை. ஆனால், இப்போது தொழில்நுட்பம் பல படிகள் முன்னேற்றம் கண்டுவிட்டது. ஆட்டோமேட்டிக் கார்கள், மேனுவல் கியர்பாக்ஸில் இயங்கும் கார்களோடு போட்டி  போட்டுக்கொண்டு மைலேஜ் தருகின்றன. ஹேட்ச்பேக் ஆட்டோமேட்டிக் கார்களில் மிக முக்கியமான கார், ஹோண்டா ஜாஸ். இரண்டாவது முறையாக இந்தியாவில் பல மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் ஹோண்டா ஜாஸின் மிக முக்கியமான போட்டியாளர், ஹூண்டாய் எலீட் i20. ஆனால், i20-ல் ஆட்டோமேட்டிக் இல்லை என்பதால், நிஸான் மைக்ராவோடு அது மோதுகிறது. 2010 முதல் நிஸான் மைக்ரா விற்பனையில் இருக்கிறது. 2013-ம் ஆண்டு சில மாற்றங்களுடன் புதுப் பொலிவுடன் விற்பனைக்கு வந்தது மைக்ரா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick