தடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்! | Mahindra Thar CRDe first drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

தடதடக்கும் தார் - பட்ஜெட் 4 வீல் டிரைவ் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / மஹிந்திரா தார்தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்தும், முறையான ஃபேஸ்லிஃப்ட்கூட செய்யப்படாமல் விற்பனையில் கோலோச்சிய, உண்மையான 4X4 அனுபவத்தைத் தந்த கார், மஹிந்திரா தார்.

காலத்தால் அழியாத MM540-ன் தாக்கத்தில் உருவான இதில், மஹிந்திரா பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யாமல் இருந்தது. மத்திய மோட்டார் வாகன ஒழுங்குமுறைச் சட்டப்படி, வாகனத்தின் பாடிக்கும், முன்பக்க பம்பருக்கும் இடைவெளி இருக்கக் கூடாது என்பது புதிய விதி. இதற்காக காரின் முன்பக்க பிளாஸ்டிக் பம்பரில் மாற்றத்தைத் தொடங்கிய மஹிந்திரா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மேலும் பல புதிய விஷயங்களையும் காரில் சேர்த்துவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick