ஸ்டைல் யூனிகார்ன் !

அறிமுகம்/ஹோண்டா ஹார்னெட் 160தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

சிபி யூனிகார்ன் சராசரியான 160 பைக் என்றால், ஸ்டைலான 160 யூனிகார்ன் பைக்காகக் களமிறங்குகிறது, சிபி ஹார்னெட் 160R.
 
யூனிகார்ன் 160, அன்றாடம் பயன்படுத்துவதற்கான கம்யூட்டர் பைக். ஆனால், 150 - 160சிசி பைக்கில் பல்ஸர், ஜிக்ஸர், யமஹா FZ, ஹீரோ எக்ஸ்ட்ரீம், டிவிஎஸ் அப்பாச்சி என இளைஞர்களை ஈர்க்கும் பைக்குகள்தான் ஹாட். இதனால், யூனிகார்னின் மார்க்கெட் சரிவதால், யூனிகார்ன் 160சிசி பைக்கின் இன்ஜினைக்கொண்டு, சிபி ஹார்னெட்டை அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா.

நேக்கட் பைக்கான இது, CB 650F மற்றும் ஹோண்டா ஹார்னெட் பைக்குகளில் இருக்கும் ஹெட்லைட் மற்றும் டிஸைன் தீமை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் உள்ளிட்ட பைக்கின் முக்கியமான விஷயங்கள் அனைத்தும், சிபி யூனிகார்னில் இருப்பதுவே!

இன்ஜின் விவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை என்றாலும், சிபி யூனிகார்னில் இருக்கும் அதே 160சிசி இன்ஜின்தான் இதிலும் இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். 162.7சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 8,000 rpm-ல் 14.5bhp சக்தியை வெளிப்படுத்தும். இதன் அதிகபட்ச டார்க் 6,000rpm-ல் 1.48kgm.

யூனிகார்னில் இருக்கும் முன் பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷனும் இதில் இடம்பெற்றுள்ளன. 10 ஸ்போக் அலாய் வீல்கள் இருக்கின்றன. டயர்களில் எந்த மாற்றமும் இல்லை. சிபி யூனிகார்ன் 160 பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை, 90 ஆயிரம் ரூபாய். அதைவிட ஹார்னெட் 160 பைக்கின் விலை, 3 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick