மிக்ஸர் பைக் !

ரீ-டிஸைன் பைக்பா.குமரேசன், கோ.கி.சரண் பிரசாத்

ரோட்டில் பேருந்து நிலையம் அருகே சாலையைக் கடக்கும்போது, ‘எந்த கம்பெனி பைக்காக இருக்கும்?’ என யோசிக்க வைக்கும் விதத்தில் நின்றுகொண்டிருந்தது அந்த டெரர் பைக். அருகே சென்று பார்த்தபோதுதான் அது ரீ-மாடிஃபைடு பைக் என்பதே புரிந்தது.

ரீ-மாடிஃபிகேஷன் என்றாலே ரெடிமேட் பாடி பார்ட்ஸ் கொண்டுதான் உருவாக்குவார்கள். ஆனால், இந்த பைக் அதிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் சிறப்பு.
இந்த பைக்கை உருவாக்கிய மெக்கானிக் பாலுவைச் சந்தித்தோம். 28 ஆண்டுகளாக பைக் மெக்கானிக் தொழில் செய்து வரும் இவருக்கு, ரீ-மாடிஃபை செய்வது, அதாவது குட்டி பைக்குகள் செய்வது ஹாபியாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick