மார்க்கெட்டைப் பிடிக்குமா S - கிராஸ் ?

போட்டி போடும் ஐந்து கார்கள் !ஒப்பீடு தொகுப்பு: சார்லஸ்

ந்தியாவின் செல்லிங் செக்மென்ட், இப்போது மினி எஸ்யுவிக்கள்தான். முதன்முதலில் 15 லட்சம் ரூபாய்க்குள் ஒரு மிரட்டலான எஸ்யுவி காரை வாங்கலாம் என நம்ப வைத்தது மஹிந்திரா. XUV500 என்கிற பெயருடன் மஹிந்திரா அறிமுகப்படுத்திய 7 சீட்டர், முழுமையான எஸ்யுவி கார். விலை குறைவான இந்த 7 சீட்டர் காருக்கு அமோக வரவேற்பு. சட்டென மார்க்கெட்டைப் பிடித்தது. 5 சீட்டர்தான்; ஆனால், விலை 9 - 13 லட்சம் ரூபாய்க்குள் இருந்ததால், டஸ்ட்டர் விறுவிறுவென முதல் இடத்துக்கு முன்னேறியது. டஸ்ட்டரின் வருகை, மினி எஸ்யுவி கார்களுக்கு இந்தியாவில் மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை போட்டியாளர்களுக்கு உணர்த்தியது. ரெனோவின் கூட்டாளியான நிஸானும் டஸ்ட்டரின் வெற்றியைப் பகிர்ந்துகொள்ள விரும்பியதால், ஸ்டைலில் மட்டும் சின்னச் சின்ன வித்தியாசங்களைக் காட்டி, விலையைக் கொஞ்சம் லைட்டாகக் கூட்டி, டெரானோ காரை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இந்தியாவில் நிஸானை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கார்,

இப்போது டெரானோதான். டஸ்ட்டர், டெரானோ ஆகிய கார்களின் வெற்றி, இந்தியாவின் மார்க்கெட் லீடர்களான மாருதி, ஹூண்டாயை அசைத்தது. இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது மினி க்ராஸ்ஓவர்/எஸ்யுவி கார்களை கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியிட்டிருக்கின்றன. மாருதியின் S-க்ராஸ், பெயரில் இருப்பதுபோலவே க்ராஸ்ஓவர் கார். ஹூண்டாய், க்ரெட்டாவை மினி எஸ்யுவி என அடையாளப்படுத்துகிறது. இங்கே போட்டி போட இருக்கும் கார்களில் XUV500 மட்டுமே முழுமையான 7 சீட்டர் எஸ்யுவி. மற்ற கார்கள் அனைத்துமே 5 சீட்டர் மினி எஸ்யுவி கார்கள். 7 சீட்டர் கார் என்பதால், XUV500 மற்ற கார்களைவிட 2 லட்சம் ரூபாய் அதிகம். டஸ்ட்டர், டெரானோ, S-க்ராஸ், க்ரெட்டா ஆகிய நான்கு கார்களுமே 10 - 17 லட்சம் ரூபாய்க்குள் போட்டி போடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick