முதல் கார் !

ரீடர்ஸ் ரெவ்யூ / மாருதி செலெரியோ ATஆர்.குமரேசன், வீ.சிவக்குமார்

நான் காந்திகிராம்  கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். திண்டுக்கல்லுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் அதிக தூரம் இல்லை. எனவே, பைக்கே போதுமானதாக இருந்தது. என் மகள் தற்போது வெளியூரில் படிக்கிறார். அடிக்கடி குடும்பத்தோடு சென்று பார்த்துவிட்டு வரவேண்டிய அவசியம் வந்துவிட்டது. அதனால், கார் வாங்கத் திட்டமிட்டோம். கார் வாங்க முடிவு செய்தபோது, கண்ணில் அடிக்கடி தென்படும் காரான மாருதி ஸ்விஃப்ட் வாங்கலாம் என்று நினைத்்தேன். என் நண்பர்களும் ஸ்விஃப்ட் வாங்கத்தான் சொன்னார்கள். அந்தச் சமயத்தில், என் வீட்டு வழியாக மாருதி செலெரியோ கார் ஒன்று அடிக்கடி போய்வருவதைப் பார்த்தேன். அடக்கமாக, அளவாக, அழகாக இருந்தது. பின்பு நண்பர்களிடம் விசாரித்தபோது, செலெரியோவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இருக்கும் தகவலைச் சொன்னார்கள். எனக்கு இதற்கு முன்பு அதிகம் கார் ஓட்டிப் பழக்கம் இல்லை. எனவே, ஆட்டோமேட்டிக் ஓட்டுவதற்குச் சுலபமாக இருக்கும் என்பதால், செலெரியோ வாங்கலாம் என முடிவு செய்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick