மஞ்சுகள் மறைக்கும் பொன் மகுடம் !

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / ஹூண்டாய் கிராண்ட் i10கா.பாலமுருகன், ரா.ராம்குமார்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தென்காசியில் இறங்கியபோது, வெயில் சுள்ளென உறைத்தது. நம்மை அழைத்துச் செல்லத் தயாராக வந்திருந்தார் டாக்டர் ராம தங்கராஜன். தென்காசி அருகே பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த இவரும் இவரது மனைவியும் பல் மருத்துவர்கள். பாவூர்சத்திரத்திலும் கடையத்திலும் க்ளினிக் வைத்திருக்கும் இந்தத் தம்பதியருக்கு, மூன்று குழந்தைகள். புத்தம் புது கிராண்ட் i10 டாப் வேரியன்ட் மாடல் காரை வாங்கி, அதில் கிரில், லைட்ஸ், சைடு பேனல் ஆகியவற்றுக்கு க்ரோம் பினிஷிங் செய்துவைத்திருந்தார் தங்கராஜன். நீண்ட நாள் மோட்டார் விகடன் வாசகரான தங்கராஜனுக்கு, கிராண்ட் i10  கார்தான் முதல் கார்.

கேரள மாநிலத்தில் உள்ள பொன்முடி என்ற மலைச் சிகரத்துக்குச் செல்வதுதான் பயணத் திட்டம். ஆனால், தனியாக வந்திருந்தார் தங்கராஜன். காரணம், குடும்பத்துடன் செல்ல காரில் இடவசதி போதாது. உடன் நண்பர் வருவார் எனச் சொல்லியிருந்தார். ஆனால், நண்பர்கள் வர முடியாத சூழ்நிலை. ‘‘கேரளாவுல ஒரு நண்பர் இருக்காரு. அவர் வந்தா நல்லா இருக்கும்’’ என அவருக்கு போனில் முயற்சி செய்தார். அவர் லைனுக்கு வரவும் விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார். ‘‘கோட்டயத்தில் இருந்து குளத்துப்புழைக்கு வந்துகொண்டிருக்கிறேன். நீங்கள் குளத்துப் புழை வரும் நேரத்தில் நானும் வந்துவிடுவேன். நாம் சேர்ந்து செல்லலாம்’’ என்றதும், உற்சாகமானார் தங்கராஜன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick