இனி பைக்கிலும் அப்பல்லோ டயர்கள்!

அறிமுகம்: டயர் கா.பாலமுருகன்

ந்தியாவில் கார், கமர்ஷியல் வாகனம் மற்றும் ஆஃப் ரோடு வாகனத் துறையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக டயர் தயாரிப்பில் கோலோச்சி வருகிறது அப்பல்லோ டயர்ஸ். இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனத்துக்கு, சென்னை, கொச்சி, பரோடா ஆகிய இடங்களில் மூன்று தொழிற்சாலைகளும் நெதர்லாந்தில் ஒரு தொழிற்சாலையும் உள்ளன. ஹங்கேரியிலும் தொழிற்சாலை அமைத்துக்கொண்டிருக்கிறது. 100 நாடுகளுக்கும் மேல் டயர்களை ஏற்றுமதியும் செய்துவருகிறது அப்பல்லோ நிறுவனம்.

அப்பல்லோ இதுவரை இரு சக்கர வாகனங்களுக்கான டயர் தயாரிப்பில் இறங்காமல் இருந்தது. இப்போது ஆஃப்டர் மார்க்கெட்டில் மற்ற டூ வீலர் டயர் நிறுவனங்களுக்குச் சவால்விடும் வகையில், ஆறு விதமான டயர்களைத் தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்களுக்கு நேரடியாக டயர்களை சப்ளை செய்துவிட்டு, அதன் பிறகுதான் ஆஃப்டர் மார்க்கெட் சந்தையில் நுழைவதுதான் டயர் தயாரிப்பாளர்களின் வழக்கம். ஆனால், அப்பல்லோ நிறுவனம் நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick