டீசல் சண்டை வின்னர் யார்?

ஒப்பீடு: மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா Vs ஃபோர்டு எக்கோஸ்போர்ட்தொகுப்பு: ர.ராஜா ராம மூர்த்தி

மாருதி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா காரை விற்பனைக்குக் கொண்டுவந்த இரண்டு நாட்களிலேயே, ஃபோர்டு நிறுவனம் எக்கோஸ்போர்ட் காரின் விலையை அதிரடியாகக் குறைத்தது. டீசல் எக்கோஸ்போர்ட் கார்களின் விலை இப்போது முன்பைவிட சுமார் 1.5 லட்சம் ரூபாய் வரை குறைவு. இப்போது டாப் வேரியன்ட்டான எக்கோஸ்போர்ட் 1.5 டீசல் டைட்டானியம்+ மாடலின் விலை, 11.63 லட்ச ரூபாய் (சென்னை ஆன்ரோடு). ஆனால், டாப் வேரியன்ட்டான ப்ரெஸ்ஸா ZDi+ மாடலின் விலை 11.46 லட்சம்.   சபாஷ் ... சரியான போட்டி!

ஓட்டுதல் தரம், கையாளுமை

எக்கோஸ்போர்ட் காரை ஓட்ட ஆரம்பிக்கும்போதே... பிடிக்கிறது. ஷார்ப்பான ஸ்டீயரிங், கச்சிதமான பாடி கன்ட்ரோல் என ஒவ்வொரு வளைவிலும் வசீகரிக்கிறது எக்கோ ஸ்போர்ட்டின் கையாளுமை.
மாருதியின் விட்டாரா ப்ரெஸ்ஸா, வளைவுகளில் நம்பிக்கையுடன் கிரிப்பாகத் திரும்பினாலும், எக்கோ ஸ்போர்ட் தரும் உற்சாகம் இதில் இல்லை. தேவையற்ற பாடி ரோல் இல்லை என்றாலும், எக்கோ ஸ்போர்ட்டில் இருக்கும் ஸ்டீயரிங் ஃபீல் இதில் இல்லவே இல்லை. ஓட்டுதல் தரத்தில் இரண்டு கார்களும் நன்றாகவே இருக்கின்றன. ஆனால், மோசமான சாலைகளில் எக்கோஸ்போர்ட் சஸ்பென்ஷன்தான் பெஸ்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick