அமேஸுக்கு இது புதுசு!

ஃபேஸ்லிஃப்ட் : ஹோண்டா அமேஸ் CVT தொகுப்பு: ராகுல் சிவகுரு

திக இடவசதி, நல்ல பெர்ஃபாமென்ஸ், கச்சிதமான டிஸைன் எனப் பல சாதகமான விஷயங்களைக்கொண்ட ஹோண்டா அமேஸ் 2013-ல் அறிமுகமானபோது, வாடிக்கையாளர்களிடம் நற்பெயரைப் பெற்றது. ஆனால், ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ, ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா ஜெஸ்ட் எனப் போட்டியாளர்கள் வரிசை கட்டி வந்ததால், காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே, அமேஸுக்குப் புத்துணர்ச்சி அளித்துள்ளது ஹோண்டா.

டிஸைன், உள்பக்கம்

அமேஸை ஷார்ப்பாகக் காட்டுவதற்காக, காரின் முன்பக்கத்தில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளது ஹோண்டா. பழைய காரில் இருந்த சின்ன கிரில்லுக்குப் பதிலாக, இரு ஹெட்லைட்டுகளையும் இணைக்கும் க்ரோம் பட்டையுடன் கிரில்லின் அளவு பெரிதாகி இருக்கிறது.

காரின் கதவைத் திறந்தவுடன் நம்மை வரவேற்பது முற்றிலும் புதிய டேஷ்போர்டு. பழைய காரின் டேஷ்போர்டு டல்லாகவும், முறையற்ற வடிவத்தையும் (சென்டர் கன்ஸோல்) கொண்டிருந்தது. மேம்படுத்தப்பட்ட அமேஸில் சென்டர் கன்ஸோல் ஒரே சீராக இருப்பதுடன், பியானோ ப்ளாக் ஃபினிஷில் இருக்கும் மல்ட்டி மீடியா சிஸ்டம் மற்றும் ஏ.சி கன்ட்ரோல்கள் ஈர்க்கின்றன. பீஜ் - கறுப்பு என இரட்டை வண்ணத்தில் இருக்கும் டேஷ்போர்டில், ஆங்காங்கே சில்வர் பயன்படுத்தப்பட்டிருப்பது க்ளாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick