சம்திங் ஸ்பெஷல்!

ஃபர்ஸ்ட் ரைடு: வால்வோ S60 க்ராஸ் கன்ட்ரிதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

ந்தியாவுக்கு க்ராஸ்ஓவர் கார்கள் புதிது அல்ல. ஃபியட் அவென்ச்சுரா, i20 ஆக்டிவ், போலோ க்ராஸ், எட்டியோஸ் க்ராஸ் போன்ற க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக்குகள், டாடா ஆரியா, S-க்ராஸ் போன்ற க்ராஸ்ஓவர் எம்பிவிக்கள் என எல்லாம் ஓகேதான். ‘ஆனால், க்ராஸ்ஓவர் செடான் கொஞ்சம் ஓவராகத்தானே இருக்கிறது?’ என நாம் நினைக்க, S60 க்ராஸ் கன்ட்ரி காருடன் மெய்டன் ஓவரை வீசியிருக்கிறது வால்வோ.

உயர்த்தப்பட்ட சஸ்பென்ஷன், ஆல்-வீல் டிரைவ், 201 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என கடமைக்கு கிராஸ்ஓவராக S60 செடான் மாற்றப்படவில்லை. இமேஜுக்காக வீல் ஆர்ச் கிளாடிங்குக்கள், சில்வர் கலர் ஸ்கஃப் பிளேட்ஸ், ஹனிகோம்ப் க்ரில் என தோற்றத்திலும் கார் வித்தியாசம்தான். பெரிய வீல்களும், டயர்களும் காருக்கு மிரட்டலான தோற்றத்தைக் கொடுக்கின்றன.

செடான் வாங்க விரும்பும் ஆனால், இரண்டாவது காராக எஸ்யுவி வாங்க விரும்பாத வாடிக்கையாளர்களையே இந்த கார் மூலம் டார்கெட் செய்கிறது வால்வோ. அவ்வப்போது மோசமான சாலைகளைத் தாண்டி இருக்கும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகளுக்குச் செல்ல இந்த கார் பெஸ்ட் என்கிறது வால்வோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick