எந்திரன் - 16

CRDi என்றால் என்ன?தொடர்: தொழில்நுட்பம்பரணி ராஜன்

 டீசல் இன்ஜின்களில் எப்போதும், டீசல் மட்டுமே தனியாக ஃப்யூல் இன்ஜெக்டர் (Fuel injector) மூலம் தெளிக்கப்படும். இந்த எரிபொருள், சிலிண்டரின் உள்ளே அழுத்தப்பட்ட உயர்வெப்பக் காற்றுடன் சேரும்போது எரிதல் நடக்கும். பெட்ரோல் இன்ஜின்களில் இருக்கும் ஸ்பார்க் பிளக்குக்குப் பதிலாக, இங்கு ஃப்யூல் இன்ஜெக்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையைத் தாங்கும் தன்மை கொண்டது. டீசல் டேங்க்கில் இருந்து, ஃப்யூல் பம்ப் வழியாக அழுத்தத்துடன் வரும் டீசல், உயர் அழுத்தக் குழாய்களின் வழியாக ஃப்யூல் இன்ஜெக்டரில் வந்து நிரம்பும். பழைய டீசல் இன்ஜின்களில் ஒவ்வொரு சிலிண்டருக்கும் ஒரு ஃப்யூல் பம்ப் இருக்கும். இ்ன்ஜெக்‌ஷன் டைமிங்கின்போது (கம்ப்ரஸன் ஸ்ட்ரோக் முடியும் நேரத்தில்), ஃப்யூல் இன்ஜெக்டரில் இருக்கும் நாஸிலை (Nozzle) அழுத்திக்கொண்டிருக்கும் ஸ்பிரிங் மேலே தூக்கப்படும். ஏற்கெனவே அழுத்தப்பட்டிருக்கும் டீசல், தனக்கு வழி கிடைத்த சந்தோஷத்தில் நாஸில் வழியாக, சிலிண்டர் ஹெட்டிலோ, பிஸ்டனின் மேற்புறத்திலோ தெறிக்கும். இவை அனைத்தும் மெக்கானிக்கல் உபகரணங்கள் மூலமே இயக்கப்படுவதால், சத்தம் மற்றும் தேய்மானம் அதிகமாகவும், எரிதல் திறன் குறைவாகவும் இருக்கும். இந்தக் குறைகளைக் களையும் படியாக வந்ததுதான் CRDI (Common Rail Direct Injection) அமைப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick