விட்டாச்சு லீவு! | Tips for summer holidays tours - Motor Vikatan | மோட்டார் விகடன்

விட்டாச்சு லீவு!

டிப்ஸ்: பயணம்ராகுல் சிவகுரு

விட்டாச்சு லீவு.... விடுமுறைக்குச் சுற்றுலா செல்ல பலரும் தயாராகிக்கொண்டிருக்கும் காலம். ஆனால், பயணம் பாதுகாப்பானதாக அமைந்தால்தான் விடுமுறையும் இனிக்கும்.

காற்றுப் பைகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்) ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்கு உறுதுணையாக நிற்கும். குழந்தைகளை முன்சீட்டில் உட்கார வைக்க வேண்டாம்.

  கடைசி நேரத்தில் அவசர அவசரமாகப் கிளம்பாதீர்கள். ‘நீங்கள் கொஞ்சம் பதற்றமாக காரை ஓட்டுகிறீர்கள்’ என்று உடன் பயணிப்பவர்கள் சொன்னால், அதைக் காது கொடுத்துக் கேளுங்கள்.
 
மேம்பாலத்தில் ஓட்டும்போது, நான்கு முனைச் சந்திப்புகளில் திரும்பும்போது கவனம் தேவை. முன்னால் போகும் வாகனத்துக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால், சமாளிப்பது சிரமம். செல்போன் பேசிக்கொண்டே காரை ஓட்டாதீர்கள். உங்களுக்கான வழியில் (Lane) காரை ஓட்டுங்கள். லேன் மாறும்போது, இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டு வேறு வாகனம் வரவில்லை என்பதை உறுதி செய்தபிறகு ஸ்டீயரிங்கைத் திருப்புங்கள்.

  வேகமாகச் செல்லும் வாகனங் களுக்கு வலதுபக்கம் வழி கொடுங்கள். இடதுபக்கமாக ஓவர்டேக் செய்யாதீர்கள்; செய்ய அனுமதிக்காதீர்கள். பக்கவாட்டுக் கண்ணாடிகளையும், ரியர் வியூ கண்ணாடியையும் சரியாகப் பயன்படுத்துங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick