எலெக்ட்ரிக்கல் கியர்... 16 வால்வு...

F1 கார் தொழில்நுட்பத்தில் F4...ஃபர்ஸ்ட் ரைடு : MV அகுஸ்டா F4தொகுப்பு: ராகுல் சிவகுரு

வர்ச்சிகரமான வடிவமைப்புக்கும், தெறி பெர்ஃபாமென்ஸுக்கும் பெயர் பெற்றது, MV அகுஸ்டாவின் F4 சூப்பர் பைக். இந்தியாவில் தற்போது களமிறங்கியுள்ள இந்த பைக், உலகளவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது... காலத்துக்கு ஏற்ற டிஸைன், தொழில்நுட்பம், பவர் எனப் பல ஏரியாக்களில்  மெருகேற்றி இருக்கிறார்கள்.

டிஸைன்

இன்ஜினுக்கு அருகேயே எக்ஸாஸ்ட் பைப் இருக்கும் இந்தக் காலத்தில், பைக்கின் பிரத்யேகமான ‘4 பைப்’ எக்ஸாஸ்ட் சிஸ்டம் கவர்கிறது. ஹெட்லைட்டுக்குக் கீழே இருக்கும் LED பட்டை புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. சிங்கிள் சைடு ஸ்விங் ஆர்ம் - க்ளாஸ்! இது, பைக்குக்கு ரேஸ் லுக் தருகிறது. ஃபுல் பேரிங் மற்றும் ரியர் வியூ மிரர்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் வகையில் டிஸைன் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூப்பர் பைக்குகளின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் கலர் ஸ்கிரீன்கள் இடம்பிடித்திருக்கும் நிலையில், F4 பைக்கின்  குறைவான ரெசல்யூஷன் ஸ்கிரீன் மற்றும் நீல நிற பேக்லிட் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல் இருப்பது நெருடல். பின்பக்க ஃபேரிங் பெரிதாக இருப்பது போலத் தெரிந்தாலும், அகலமான இருக்கை அதனை நியாயப்படுத்திவிடுகிறது.

தொழில்நுட்பம்

நாம் டெஸ்ட் செய்த F4R மாடலில், Forged வீல்கள் மற்றும் Ohlins பின்பக்க டேம்பர் இடம்பெற்றிருந்ததன. ஆனால், இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படுவது இல்லை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பேஸ் மாடல் F4 பைக்கில் கேஸ்ட் அலாய் வீல்களும், Sachs பின்பக்க டேம்பரும் பொருத்தப்பட்டுள்ளன.

 மூன்று கைரோஸ்கோப், ஆக்ஸிலரோமீட்டர் சென்ஸார்களைக்கொண்ட IMU, 8 ஸ்டேஜ் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், ரேஸ் மோடு உடன் பாஷ் ABS, 3 ஸ்டேஜ் (இன்ஜின் பிரேக்கிங் கன்ட்ரோல், டார்க், திராட்டில் தன்மை), நான்கு ரைடிங் மோடுகள் (Normal, Sport, Rain, Custom) என மாடர்ன் சமாச்சாரங்கள் F4 பைக்கில் நிரம்பியுள்ளன.

ஒரு சிலிண்டருக்கு 4 ரேடியல் வால்வுகள் வீதம், மொத்தம் 16 ரேடியல் வால்வுகள் இருக்கின்றன. இந்த தொழில்நுட்பம், ஃபெராரியின் ஃபார்முலா-1 இன்ஜின்களில் பயன்படுத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick