தல... தளபதி!

ஒப்பீடு : கவாஸாகி நின்ஜா ZX-14R Vs சுஸூகி ஹயபூஸாதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பைக் உலகில் தனக்கென பெஞ்ச் மார்க் வைத்த சுஸூகியின் ஹயபூஸா பைக், இப்போது இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது. இன்னொரு பக்கம், இந்தியாவின் ரேஸ் டிராக்குகளில் கவாஸாகியின் இரண்டாவது தலைமுறை ZX-14R பைக்கின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு மிக த்ரில்லான பைக் எது?

2015-ம் ஆண்டில் H2 பைக்கை கவாஸாகி அறிமுகப் படுத்தியதும், இத்தனை நாட்கள் ராஜாபோல இருந்த Zx-14R பைக்குக்குக் கொஞ்சம் இமேஜ் டேமேஜ்தான். இன்னொரு பக்கம் ஹயபூஸாவுக்கு, பழைய பைக் இமேஜ் வந்துவிட்டது. ஆனால், இரண்டு பைக்குகளுக்கும் இருந்த ரசிகர் கூட்டம், தங்கள் ரசனையை  மட்டும் விடவில்லை. ஹயபூஸாதான் இன்னும் உலகில் வேகமான மோட்டார் சைக்கிள் தயாரிப்புச் சாதனையை வைத்திருக்கிறது.

ஹயபூஸாவின் ‘பூசியது’ போன்ற பருமனான டிஸைனுக்கு வயதாகிவிட்டது. மிரர்கள்கூட 1980-களில் வந்த டிஸைன். ஒட்டுமொத்தமாக பைக்கின் தோற்றம் வளைவு நெளிவுகளுடன், ‘தம்’மென்று இருக்கிறது. Zx-14R பைக் பார்க்க பெரிதாக இருந்தாலும், கச்சிதமாக பேக்கேஜிங் கொண்ட டிஸைன். என்ன... ஹயபூஸாவைவிட கொஞ்சம் எடை அதிகம். இருக்கை உயரம் கொஞ்சம் குறைவு என்பதால், பார்க்கிங்கின்போது எளிதாகவே கையாளலாம்.

ஹயபூஸா பார்க்க பெரிய பைக்காக இருந்தாலும், ஏறி அமர்ந்தால் சின்ன பைக் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சீட்டிங் பொசிஷன் செம்ம ஸ்போர்ட்டி. பைக்கை வளைவுகளில் விரட்டி விரட்டி ஓட்ட வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick