க்ரூஸர் பிரதர்ஸ்!

தொகுப்பு: ராகுல் சிவகுரு

க்ரூஸர் பைக் செக்மென்ட்டில், இரண்டே இரண்டு பைக் மாடல்கள்தான் இந்தியாவில் உள்ளன. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த UM குளோபல் நிறுவனமும் இந்தியாவின் லோஹியா ஆட்டோ நிறுவனமும் இணைந்து, ‘ரெனிகெய்ட்’ எனும் பெயரில் இரண்டு க்ரூஸர் பைக்குகளைக் கச்சிதமாகக் களம் இறக்கி இருக்கிறது.

டிஸைன்

ரெனிகெய்ட் கமாண்டோ மற்றும் ரெனிகெய்ட் ஸ்போர்ட் எஸ் ஆகிய இரண்டுமே க்ரூஸர் பைக்குகள்தான். ஆனால், இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள். கமாண்டோவின் வடிவமைப்பு, ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாயை நினைவுபடுத்துகிறது. இதன் மேட் ஃபினிஷ் ராணுவப் பச்சை நிறமும், டேங்க்கின் பக்கவாட்டில் இருக்கும் பெரிய நட்சத்திர ஸ்டிக்கரும் - இது ஓர்அமெரிக்க பைக் என்பதைச் சொல்கிறது. க்ரூஸர் பைக்குகளுக்கே உரிய சிறப்பம்சங்களான உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார், புஷ்டியான முன் பக்க - பின் பக்க ஃபெண்டர்கள், ஸ்போக் வீல்களில் முன்பக்கம் 16 இன்ச் - பின்பக்கம் 15 இன்ச் டயர்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கின்றன.

ஸ்போர்ட் எஸ் பைக்கின் ஸ்டைல் மற்றும் கலர், சுஸூகி இன்ட்ரூடரை நினைவுபடுத்துகிறது. டேங்க்கின் அருகே இருபுறமும் இருக்கும் ஏர் இன்டேக்கில் காணப்படும் LED பட்டைகள், இண்டிகேட்டராகவும் செயல்படுகின்றன. மேலும், அலாய் வீல்களில் பாடி கலரில் பின்ஸ்ட்ரிப் (Pinstripe) செய்யப்பட்டிருப்பது வெகு அழகாக இருக்கிறது. கமாண்டோ பைக்கில் இருக்கும் அதே பெட்ரோல் டேங்க்தான் ஸ்போர்ட் எஸ் பைக்கிலும் இருக்கிறது என்றாலும், ஸ்பீடோ மீட்டர் ஹேண்டில்பாருக்கு மேலே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick