யமஹாதகன்!

மெக்கானிக் : யமஹா RXச.ஜெ.ரவி, படங்கள்: தி.விஜய்

மஹா RX சீரிஸ் பைக்குகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. 1980-களில் இளைஞர்களாக இருந்தவர்களும், இப்போது இளைஞர்களாக இருப்பவர்களும் என யமஹாவின் காதலர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள்.

‘இந்த பைக் இன்ஜின் சவுண்ட் வேற எந்த பைக்குலயும் வராது. இந்த லுக் இப்போ ஏதாவது பைக்குல கிடைக்குமா? இந்த மாதிரி பிக்-அப்பை நீங்க இப்போ எல்லாம் நினைச்சுப் பார்க்க முடியுமா?’ என இவர்களின் யமஹா RX100 புராணம் சொல்லி மாளாது. கோவை அருகே, மேட்டுப்பாளையத்தில் ஒரே நேரத்தில் புத்தம் புது பளபளப்புடன் ஏராளமான யமஹா RX பைக்குகள் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தன. ‘பிளாக் தண்டர்’ அருகே ஒதுங்கியவர்களிடம் பேசினோம்.

‘‘எப்படி இந்த அளவுக்குப் புதுசு மாதிரி வெச்சிருக்கீங்க?’’ எனக் கேட்டதும், “யமஹா மெயின்டனன்ஸ் ஃப்ரீ பைக்தான். பெரிய செலவு வைக்காது. ஆனா, ஒரு நம்பகமான மெக்கானிக் அவசியம். அப்படி யமஹாவுக்குனு பிரத்யேகமான மெக்கானிக் எங்ககிட்ட இருக்காரு!” எனக் கூட்டத்தில் இருந்த சுரேஷ்பாபுவை அறிமுகப்படுத்தினார்கள்.

“மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் சுரேஷ்பாபு பிரபலமான யமஹா மெக்கானிக். பைக்ல சின்னப் பிரச்னைனா, எங்க இருந்தாலும் இவர்கிட்டதான் வருவோம். இவர் யமஹாவைத் தவிர வேற பைக்கும் சர்வீஸ் செய்யமாட்டார். இவர் சர்வீஸ் பண்ற ஒவ்வொரு யமஹாவும் ‘நெருப்புடா’னு கிளம்பும். அப்படிப்பட்ட யமஹாதகன் இவர்!” என வாடிக்கையாளர்கள் முன்னுரை கொடுக்க... சுரேஷ் பாபுவிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick