மகிழ்ச்சி மஸ்டாங்...

ஃபோர்டின் நெருப்படா! ஃபர்ஸ்ட் டிரைவ் : ஃபோர்டு மஸ்டாங்தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி, ராகுல் சிவகுரு

ட்டோமொபைல் உலகில் நீண்ட வரலாற்றைக்கொண்ட கார், ஃபோர்டு மஸ்டாங். ஏப்ரல் 1964-ம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருக்கும் மஸ்டாங், வெறும் கார் அல்ல... பிராண்டும் அல்ல...  அமெரிக்க ஆட்டோமொபைல் துறையின் அடையாளம் மஸ்டாங்.

உலக அளவில் 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மஸ்டாங், அந்த ஆண்டில் மட்டும் 1.10 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்தது. அமெரிக்காவைத் தாண்டியும் தன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இந்த ஆறாவது தலைமுறை கார் இறங்கியிருக்கிறது. இந்த காருக்கு, இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை, 65 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரில் இருக்கும் ஃபோர்டு நிறுவனத்தின் ஃப்ளாட் ராக் தொழிற்சாலையில் கார் முழுவதுமாக அசெம்பிள் செய்யப்பட்டு, CBU-வாக இங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆக, உலகத் தரத்திலான ஒரு ஸ்போர்ட்ஸ் கார், இந்த விலையில் கிடைப்பதும், நம் ஊர்ச் சாலைகளில் அதைப் பார்க்க போகிறோம் என்பதையும் நினைத்து, அதன் ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

டிஸைன், கேபின்

அமெரிக்காவில் ‘Muscle Car’ அல்லது ‘Pony Car’ என்ற புதிய செக்மென்ட்டைத் துவக்கிய பெருமை, மஸ்டாங் காரையே சேரும். இதன் பின்னர்தான், மஸ்டாங்கின் ஸ்போர்ட்ஸ் கூபே பாணியைப் பின்பற்றி, செவர்லே கமாரோ மற்றும் டாட்ஜ் சேலஞ்சர் போன்ற கார்கள் தயாரிக்கப்பட்டு போட்டியாளர்களாகக் களம் கண்டன. கிட்டத்தட்ட 3,000 ஹாலிவுட் படங்களில் தோன்றியுள்ள மஸ்டாங், ஒரு மெகா ஹாலிவுட் ஸ்டார். அதில் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ், சார்லீஸ் ஏஞ்சல்ஸ், கான் இன் 60 செகண்ட்ஸ், டெத் ரேஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எல்லாம் சரி, காரின் டிஸைன் எப்படி இருக்கிறது?

முன்பைவிட பார்க்க நேர்த்தியான, ஸ்மார்ட்டான டிஸைனைக்கொண்டிருக்கிறது புதிய மஸ்டாங். பழைய காரில் இருந்த கரடுமுரடான ஆட்டிட்யூட், இந்த காரில் இல்லை. மாறாக, காரில் இப்போது வளைவு நெளிவுகள் அதிகமாக இருக்கின்றன. முந்தைய காருடன் ஒப்பிடும்போது, மாற்றியமைக்கப்பட்ட உயரம் அகலம் காரணமாக, ஃபைட்டர் ஜெட் போன்ற நேர்த்தியான வடிவமைப்பைப் பெற்றிருக்கிறது. ஆனாலும், மஸ்டாங் ட்ரேட் மார்க் மிரட்டல் (கிரில், டெயில் லைட்ஸ், பெரிய பானெட்) அப்படியே தொடர்வது பெரிய ப்ளஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick