ஜெர்மன் டிஸைனில், கொரியன் கார்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : ஹூண்டாய் எலான்ட்ரா 1.6Pதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

துவரை ஹூண்டாய் உருவாக்கியதில் அழகான கார், ஐந்தாம் தலைமுறை எலான்ட்ரா. அதன் ஃப்ளூயிடிக் டிஸைன் கோட்பாட்டின் மிகச் சிறந்த செயலாக்கமாகத் திகழ்ந்த கார் இது.

இப்போது புதிய எலான்ட்ரா அறிமுகமாகியுள்ளது. புதிய காரின் அழகு, வாடிக்கையாளர்களின் ரசனையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், இன்ஜின், சேஸி என பிராக்டிக்கலான மாற்றங்கள் என்னென்ன?

 டிஸைன்

புதிய எலான்ட்ராவில், பழைய காரில் இருந்த வழிந்தோடும் வளைவுகள் இல்லை; காரின் பின்னால் இருந்த நீளமான டெயில் லைட்டுகளும் இப்போது இல்லை. பார்க்கவே படகுபோல, தாழ்வாகத் தோற்றமளித்த கார் அது.

புதிய காரின் தோற்றம், பழைய கார் டிஸைனுடைய பரிணாம வளர்ச்சியாகத் தோன்றுகிறது. காரின் அடிப்படைத் தோற்றம் அப்படியே இருக்கிறது. ஆனால், காரின் முன்பக்கம் முற்றிலும் புதிய டிஸைன். பழைய காரின் கிரில் தாழ்வாக இருக்கும். இதில் ஆடி ஸ்டைலில் கம்பீரமாக உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்ஸ் டிஸைனும், கிரில்லுடன் கச்சிதமாகப் பொருந்துகிறது. பழைய கார் மிகவும் பெரிதாக, அகலமாகத் தோற்றமளிக்கும். புதிய எலான்ட்ரா கொஞ்சம் காம்பேக்ட்தான். நீளம்தான் அதிகம். பின்பக்க டிஸைன் சூப்பர் ஸ்மார்ட்.

மோனோகாக் சேஸி இப்போது High Grade ஸ்டீலில் உருவாக்கப்பட்டுள்ளது. 53 சதவிகிதம் இப்போது ஹை-ஸ்ட்ரென்த் ஸ்டீல்தான். (பழைய காரில் 21 சதவிகிதம்தான்) இதனால், சேஸி முன்பைவிட 30 சதவிகிதம் இறுக்கமாகி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick