டஸ்ட்டருக்கு செக்! - எது உங்கள் கார்?

ஒப்பீடு: S-க்ராஸ் Vs க்ரெட்டா Vs டஸ்ட்டர் AWD Vs BR-Vதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

10 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், நல்ல கார் வாங்க வேண்டும் என்றால், செடான் கார்தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இப்போது இல்லை. காரணம், சின்ன எஸ்யுவிகளும், க்ராஸ்-ஓவர்களும்தான் இந்த செக்மென்ட்டை ஆக்கிரமித்திருக்கின்றன. இங்கே போட்டி போடும் நான்கு கார்களில் வெற்றியாளரைத் தேர்வு செய்வதைவிட, அவற்றின் ப்ளஸ் - மைனஸ் என்ன என்பதைத்தான் இங்கே முக்கியமாகப் பார்க்கப் போகிறோம். ஏனென்றால், நான்குமே வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கானவை.

நான்கு கார்களிலும் விலை உயர்ந்த, மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் மாடல்களை இங்கு அலசப் போகிறோம்.

டிஸைன்

ஹோண்டா BR-V பார்க்க ஒரு எஸ்யுவியும், எம்பிவியும் கலந்த டிஸைனைக்கொண்டிருக்கிறது. S-க்ராஸ், தாழ்வான தோற்றத்தைக் கொண்ட ஒரு க்ராஸ்-ஓவர். ஹூண்டாய் க்ரெட்டா, பார்க்க அர்பன் எஸ்யுவி தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. டஸ்ட்டர், கரடுமுரடான மிரட்டல் டிஸைன்கொண்ட சின்ன எஸ்யுவி.

4.4 மீட்டர் நீளம் கொண்ட ஹோண்டா BR-V கார்தான் இந்த நான்கில் நீளமானது. அதேசமயம், குறுகலான காரும்கூட. அதனால், காரின் தோற்றம் மனதில் பதியும் அளவுக்கு இல்லை. முன்பக்கம் எஸ்யுவிபோல இருந்தால், பின்பக்கம் எம்பிவி போல நீளமாக இருக்கிறது. இதனால். தனித்துவமான டிஸைன் கொண்டிருந்தாலும், அழகுக்காக மட்டும் இது வாடிக்கையாளர்களை இழுக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick