பியட் லீனியா, சிட்டிக்குப் போட்டியா? | Fiat Linea 125 S - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

பியட் லீனியா, சிட்டிக்குப் போட்டியா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபியட் லீனியா 125 Sதொகுப்பு: ராகுல் சிவகுரு

ஃபியட் லீனியா அறிமுகமாகி 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. தொழில்நுட்பரீதியிலும் டிஸைனிலும் பல்வேறு அப்டேட்களைப் பெற்றிருந்தாலும், லீனியாவின் விற்பனை ஏறுமுகத்தில் இல்லை. பக்கா பேக்கேஜ் கொண்ட காராக இருந்தாலும், குறைவான டீலர் நெட்வொர்க்  காரின் விற்பனையை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதற்கு லீனியா சிறந்த உதாரணம். அடுத்த முயற்சியாக அதிக பவர், டச் ஸ்கிரீன் சிஸ்டம் எனப் புதிய பலங்களோடு லீனியா 125-S எனும் புதிய வேரியன்ட்டைக் களமிறக்கியிருக்கிறது ஃபியட்.

லீனியா 125-S காரில் இருப்பது, அவென்ச்சுரா (142bhp), புன்ட்டோ அபார்த் (147bhp), பழைய லீனியா (114bhp) ஆகிய கார்களில் இருந்த அதே 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். மாறுபட்ட இன்ஜின் ட்யூனிங் காரணமாக, 125bhp பவரை வெளிப்படுத்துகிறது. இங்கும் 2,000 ஆர்பிஎம்-க்கு மேல்தான் டர்போ சார்ஜர் இயங்கத் தொடங்குகிறது என்றாலும், குறைவான வேகங்களில் தேவையான பவர் கிடைப்பதால், நகருக்குள் காரை ஓட்டுவது சுலபமாக இருக்கிறது. இன்ஜின் ஃப்ரீயாக ரெவ் ஆவதுடன். 2,000 ஆர்பிஎம்-ல் இருந்து 6,500 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி சீராக இருக்கிறது. குறைவான வேகங்களில் சத்தமின்றி இயங்கும் இன்ஜின், அதிக வேகத்தில் செல்லும்போது சத்தம் போடுவது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். டர்போ பெட்ரோல் இன்ஜின்கள், விரட்டி ஓட்டினால் குறைவான மைலேஜைத் தரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் துல்லிய மாக இல்லாததுடன், ஒவ்வொரு முறையும் கியர்களை மாற்றுவதற்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டி யுள்ளது. ஆனால், இன்ஜின் டார்க் காரணமாக அடிக்கடி கியர்களை மாற்றத் தேவையில்லை என்பது ஆறுதல். ஸ்டீயரிங்கின் எடை காரணமாக, நகருக்குள் நெரிசலான இடங்களில் காரைச் செலுத்துவது சுலபமாக இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில் கையாளுமை சிறப்பாக இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick